இனிய உறவுக்கு 8 டிப்ஸ் ! – குளு குளு கோடை ஸ்பெஷல்

எந்த சின்ன விஷயமும் நமக்கு ஓர் நெருக்கடியாகி விடுகிறது. வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போல எண்ணத் தொடங்குகிறோம். கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற மனோபாவம் வந்து வெற்றிப் பாதையை அமைத்துக்கொடுத்து விடும்.

சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.

1. சாதிக்க வேண்டுமென்றால் …

மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள். சாதனைகள் தாமாகவே தொடரும்.

2. பிறருடன் பேசும்போது…

ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்க. இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும்.

3. குப்பை எண்ணங்கள் வேண்டாமே !

எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. இதுபோன்ற எண்ணங்கள் குமுறிக் கொப்பளிக்கிறபோது அசாத்தியமான மனஇறுக்கத்தை நீங்கள் அசைபோடுகின்றபோது எவ்வளவு மோசமான மனநிலைக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. விளைவாக குழப்பமான போராட்டத்தை மிக்க மனநிலைக்கு நீங்கள் ஆளாகிப் போகிறீர்கள்.

இதுபோல் எதிர்மறை எண்ணம் என்கிற குப்பை தொடர்ந்து மனதுக்குள் சேர ஆரம்பிக்கிறது. விளைவு என்ன ? மனம் கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.

4. யார் சரி ? யார் சரியில்லை ?

எப்போதுமே நீங்கள் நினைப்பது சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமா ? – என்கிற இரண்டு நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு மற்றவர்களைத் திருத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அந்த சந்தோஷத்தில் நாமும் பங்கு பெறலாம்.

5. விரும்புவது கிடைக்காவிட்டால்..

நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடவும் முடியாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.

6. பிறர் விஷயத்தில் பொறுமை..

நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது ? இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. சுலபத்தில் கோபப்படுகிறோம், வெறுப்படைகிறோம். இது தேவைதானா என்று சில வினாடிகள் யோசித்துப் பார்த்தால், எவ்வளவு அற்பமான காரியங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது புரியும்.பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும்.

மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

7. எங்கே இருக்கிறது திருப்தி ?

“”திருப்தி என்பது என்ன ? பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா…? பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தால், இருபதாயிரம் ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீடு எப்போது வாங்கலாம் என்கிற ஆசை பிறக்கும். இல்லாவிட்டால் இந்த வீட்டை மேலும் விரிவுபடுத்தலாம் என்கிற ஆசை பிறக்கும். எல்லா வசதிகளுமே இப்படித்தான். திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும்.

8. மற்றவர்களைத் திருத்துவதா ?

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.


நன்றி மங்கையர்மலர்! rolleyes.gif

கிச்சன் டிப்ஸ் – 8

* பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முதல் நாளே ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால், சுலபமாக தோல் உரிக்க வரும்.

* உணவில் காரம் அதிகமாகி விட்டதா? கவலையை விடுங்கள். அதில், சிறிது எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.

* பிரியாணி செய்யும் போது அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால், சாதம் ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்கும்.

* எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.

* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

* கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.

* மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும். அதே போல், காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.

* பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.

* சாம்பார் செய்யும் போது அதில் ஒரு நெல்லிக் காயை சேர்த்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

* உளுத்தம் வடை செய்யும் போது, சிறிது இட்லி மாவு சேர்த்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காது. சுவையும் நன்றாக இருக்கும்.

* முட்டை ஓட்டில் விரிசல் இருந்தால் வேக வைக்கும் போது, அதில் உள்ள திரவம் தண்ணீரில் கலந்து விடும். இதை தடுக்க தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேக வைக்கலாம்.

* அப்பளம், வடாம் போன் றவை வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத் தை போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

* மைக்ரோ ஓவனில் அரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், வேகமாக சூடாகும்.

* முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு நீண்ட நாட்கள் இருந் தால், உளுத்துப் போகிறதா? மஞ்சள் கிழங்குடன், கற்பூரத் தையும் சேர்த்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உளுத்து போகாமல் இருக்கும்.

* கலந்த சாதம் செய்ய, சாதத் தை ஆற வைக்கும் போது அதில் சிறிது நல்லெண் ணெய் ஊற்றி ஆறவைத்தால், உதிராக இருக்கும்.

* தேங்காய் சாதத்தில் சிறிதளவு வேர்கடலையை சிறிது சிறிதாக உடைத்து போட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.

* மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும்; இல்லையென் றால், சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும்.

* ரவா லட்டு செய்யும் போது சர்க்கரையுடன், சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.

* தக்காளி சாதம் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

* தேங்காய் துருவலை பால் சேர்த்து அரைத்து பர்பி செய் தால், கூடுதல் வெண்மை நிறமாக இருக்கும்.

* பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.

நன்றி தினமலர்! :)

« பழைய வரவுகள்