பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
பாடியவர்: உன்னிமேனன், சுவர்ணலதா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா…
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
படம்: காதல் வைரஸ்
பாடல்: வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
பாடியவர்: ஸ்ரினிவாஸ் & கார்திக்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பழா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நனை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?
உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது
நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்
அவன் படைப்பினில் மிக சிறந்தவள் ஒஹோ ஹோ
சிலு சிலுவென விழும் புது பனி துளியோ
மழை எழுதும் முதல் கவியோ
தம் தம் தம் சங் சங்கீதம்
கொளுசொரு ஜல்
நீலம் தோய்த்த அந்த ஆகாயம்
உந்தன் மேலாடும் நூலாடையோ…
ஒரு தரம் சிரிக்கையில் தெரிக்கையில்
புது புது கவிதைகள் புலப்படும் புறப்படும்
ரதியே ரதம் போல் நடந்தே
நீ வரும் வழி எங்கும்
குறிஞ்சி மலர்போல் குலுங்கும்
கூர் நெருஞ்சி முள் என்றும்
நதிக்குள் குதிக்கும் மீன்கள்
உன் நீள் விழி கண்டு
நிலத்தில் வாழும் மீனோ
என வியப்பது உண்டு
வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பழா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நனை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?
தினம் தினம் மனதினில் உந்தன் முகமெழுதி
ரசித்திருப்பேன் உயிர் தழுவி
கா-தல் தே-வி என் நெஞ்சம்
உன் கோயில்-தான்
காதல் என்றும் அந்த கோயில் தீபம்
என்று எண்ணங்கள் ஏற்காதோ…
இடி மின்னல் மழையிலும்
அடிக்கின்ற புயலிலும்
உயிர் உள்ள வரையிலும்
ஒளி விடும் விளக்கிது
என்னை தான் கனம் நீ பிரிந்தால்
நீர் விழிகளும் வார்க்கும்
உனைதான் வருத்தும் அவள் யார்
என இயற்கையும் கேட்க்கும்
பெண்ணை அழகாய் படைத்தல்
அந்த இயற்க்கையின் வேலை
அறிந்தும் எனையே கேட்டால்
அட இது என்ன லீலை?
வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பழா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நனை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?