தென்மேற்குப் பருவக் காற்று – கருத்தம்மா

படம் :கருத்தம்மா
பாடல் :தென்மேற்குப் பருவக் காற்று
குரல்: உன்னிகிருஷ்ணன், சித்ரா
வரிகள்: வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்

சுத்தி சுத்தி வந்தீக – படையப்பா

படம்: படையப்பா
பாடல்: சுத்தி சுத்தி வந்தீக
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி

பெண்:
சுத்தி சுத்தி வந்திக
சுட்டு விரலால் சுட்டிக
அய்யொ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்திக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

ஆண்:
சுத்தி சுத்தி வந்திக
சுட்டு விரலால் சுட்டிக
முத்தாடும் ஆசை முத்தி போக
எத்தனை பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முன்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பெண்:
பொம்பளை உசுரு
போக போக நோக
இந்திரன் மகனெ
இந்த தொல்லை வாழ்க

ஆண்:
பொம்பள உசுரு
போக போக நோக
ஆன்பல கொடுக்கும்
அன்பு தொல்ல வாழ்க
அட காதல் தேடலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

பெண்:
சுத்தி சுத்தி வந்திக
சுட்டு விரலால் சுட்டிக
அய்யொ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்திக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

ஆண்:
என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளைவிக்கு
மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு
முத்தம் தருவேன்

பெண்:
என் உசுர கொடிக்கும் என் உசுர கொடிக்கும் உதடுக்கு
மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீரும் கன்னம் கீரும் நகத்துக்கு
முத்தம் தருவேன்

ஆண்:
அட தும்மும் பொழுதில்லும் இம்மி அளவுலும் பிரியாதீக

பெண்:
ஒம்ம தேவை முடிஞ்சதும்  போர்வை போர்த்தியே  உறங்காதீக

ஆண்:
இனி கண் தூங்கலாம் கைக தூங்காதுகங்க

பெண்:
ஒரு தாலிக்கு முன்னால் ஒரு தாலாட்டு வைகாதீக

சுத்தி சுத்தி வந்திக
சுட்டு விரலால் சுட்டிக
அய்யொ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்திக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்
தயிர்போல தயிர்போல உறையிறேன்
கயிர் மேலே  கயிர் போட்டு கரைக்கிறீங்க

ஆண்:
நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கிறங்கவும்
மயங்கம் தெளிஞ்சு மயங்க தெளிஞ்சு எழுப்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அய்யோ அடிக்கிறீக

உச்சி வெயிலில் குச்சி ஐஸ் போல உருகாதீக
தண்ணி பட்டலே தாகம் எடுக்கையில் எரியாதிக
எல்லை தான்டாதேக என்னை தொடாதிக
என் வாயொடு வாய் வைக்க வக்கீலு வைக்காதீக

சுத்தி சுத்தி வந்திக
சுட்டு விரலால் சுட்டிக
அய்யொ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்திக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

« பழைய வரவுகள்