அக்கினிகாற்றுக் கோளம் வெடிப்பு


மிக நுண்ணிய அணுவின் இருப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே குறிப்பிட்டிருப்பது மட்டுமன்றி, துளைக்கவும் முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது தமிழ் நூல்களில். அணுவில் ஒரு கூறாக இருப்பவரே அண்டம் முழுவதும் வியாபித்து இருப்பதாக ஆழ்வார்களும் சைவ அருளாளர்களும் பாடியுள்ளனர்.
அணுவை பிரித்தால் ஒலியாகவும், பொருளாகவும் பிரிந்து சக்திஞியாகும் என்பதும் அணுவுக்குள் உள்ள அசைவே ஸ்ரீநடராஜ பெருமானின் உருவஅமைப்பு தத்துவம் என்பதும் தமிழ் சைவக் கோட்பாடு. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தனது அணுசக்தி விஞ்ஞானத்தைகண்டு பிடித்த பின் திருவாச்சியுடன் கூடிய ஸ்ரீநடராஜர் உருவத்தை பார்த்ததும் ஒலியும், பொரும் அதன் சக்தியும் Doctrine of Relativity என்ற மது விஞ்ஞான முடிவுக்கு ஆதாரமாக உள்ளது என்று வியந்து விட்டார்.

அணுவை பிளக்கும் போது உண்டாகின்ற இரு பிரிவுகளுக்கு எலக்ட்ரான், புரோட்டான் என்று பெயரிட்டுள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள். அணுவை தமிழ் அருளாளர்கள் வியந்து விளக்கியுள்ளனர். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திரு அண்ட பகுதியில் முதல் நான்கு வரிகளிலேயே அண்ட தத்துவத்தை விளக்கி விடுகின்றார். பிரம்மாண்டத்தில் உள்ள எண்ணிறந்த கோளங்களின் தன்மைகளை முற்றிலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆராய்ந்தால் அவற்றின் சீரமைப்பும், அழகும், வியப்பிற்குரியது. தனியழகுடன் கோடிக்கணக்கில் உள்ள அந்த கோளங்கள்அகண்டமான பிரபஞ்சத்தில் விரிந்து போகின்றன என்கிறார்.

இதையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களும், சிந்தனையாளர்களும், அண்ட வெளியில் உள்ள நெருப்புடன் கூடிய வாயு (அக்கினி காற்று) கோளம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மாற்றத்தால் Big Bang என்ற பெரு வெடிப்புக்கு உள்ளாகி, அதன் மூலம் நட்சத்திர கூட்டங்களும், கிரகங்களும் தோன்றின. அப்போது ஏற்பட்ட பிளாக்கோல் எனும் கருந்துளைகள் தமது ஆகர்ஷண சக்தியால் எல்லா கிரகங்களையும் விழுந்து விடாமல் இழுத்து பிடித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த கருத்தை விஞ்ஞான பூர்வமாக நிரூபிப்பதற்காக செய்ற்கையானபெரு வெடிப்பு முயற்சிகள் துவங்கியுள்ளன.

இதற்காக சுவிட்சர்லாந்து பிரான்ஸ் எல்லை பகுதியில் தரைக்கு அடியில் முன்னூறு மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. .லகின்பல நாடுகளும், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தினம் என்று வேறுபட்ஐட நாடுகள் உள்பட ஒன்றுபட்டு ஒரு சில ஆண்டுகளாக திட்டமிட்டுள்ளனர். இங்கு ஹைட்ரஜன் அணுக்கள் உடைக்கப்பட்டு, புரோட்டான்கள் உருவாக்கப்படும். இவை ஒளியின் வேகமான ஏழாயிரத்து அறுநூறு கிலோ மீட்டர் வேகத்தில் இருபத்தேழு கிலோமீட்டர் நீளத்தில் நீள்வட்ட வடிவிலான உருளையில் வலம் வர செய்யப்படும். இந்த சோதனையின் போது புரோட்டான் செல்லும் பாதையின் எதிராக இன்னொரு கற்றை புரோட்டான்கள் அதிவேகத்தில் வரச்செய்யப்படும்.

இரு புரோட்டான்களும் அதிவேகமாக மோதும் போது அளப்பரிய சக்தி வெளிப்படும்.ஆயினும், இதன் மூலம் இருள்பொருள், எதிர் பொருள் என்ற பலவித சக்திகள் பற்றிய கண்டுபிடிப்புகளுடன் அணுக்களை இணைக்கும் சக்தி பற்றியும் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த சோதனையினால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக பேரழிவு நேரிடும் என்றும், புரோட்டான்கள் மோதுவதால் தோன்றும் கருந்துளைகளால் இந்த பிரபஞ்சத்தின் கோள்களும் நட்சத்திரங்களும் தமது நியதியான இயக்கத்திலிருந்து பிறழ்ந்து வழி தவறி மோதிவிடவோ அல்லது பூமி நோக்கி வீழ்ந்து விடவோ ஆபத்துக்கள் உண்டு என்றும் வேறு பல விஞ்ஞானிகள் அச்சுறுத்தியுள்ளனர். மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சி காரணமாக மனித உயிர்களின் இருதயம், நரம்பு பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கையாக தடுக்கப்பட்டு வருவதை காண்கிறோம். அதே போல் பிரபஞ்சம், உலகம் பற்றிய விஞ்ஞான அறிவுமனித குலத்திற்கு பெரும் பயன் விளைவிக்கும் என்று நாம் நம்பலாம். 10.09.08 அன்று தொடங்கப்பட்ட இந்த சோதனையின் முதல் கட்டமானது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது.

புரோட்ஐடகூõன்கள் ஒரே திசையில் அதிவேகத்துடன் செல்லும்படி செய்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். அடுத்த மாதம் புரோட்டான்களை எதிர் திசையில் திருப்பி விட திட்டமிட்டுள்ளனர். புரோட்டான்கள் உராய்வதால் கிடைக்கும் விளைவினால், காந்த சக்தி உறுதியும் அணு சக்தியின் எளிய நிலையும் கூடஅறிய முடியும். சுத்த சிவத்திடமிருந்து வந்த ஜடசக்தியே பஞ்ச பூதங்களாகி, அவற்றால் எண்ணிறந்த அண்டங்கள் உண்டான பின், அவையே சிவபெருமானின் அருவத்திருவுருமாகிய லிங்கம் என்ற சைவ சித்தாந்தமும்,உலகம், பிரபஞ்சம் மற்றும் யுகங்கள் பற்றிய வேதங்கள் போன்றவற்றை மேல்நாட்டு விஞ்ஞானிகள் தெரிந்திருக்க மாட்டார்கள்.ஆயினும், இவற்றில் ஈடுபாட்டுடன் நேசித்து அறிந்திருக்கும் நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் மனித குலம் உயரும் என்று வழி மொழிந்திருக்கின்றார். இறைவனின் படைப்பில்உயர்ந்ததான மனித அறிவின் மகத்தான் சாதனைகள் தொடரும் என்று பெருமிதப்பட வைக்கிறது. மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான். மனிதர்களுக்குள் மன மாச்சர்யங்கள் ஒழிந்தது. மனித நேயம் மேம்படும் என்பதால் என்றும் நிலவுமே ஆனந்தம்.

நன்றி மஞ்சரி! :)

“டிபன் பாக்ஸ்’ நிறைய உணவை அடைப்பதால் சாப்பிடத் தெரியாமல் திணறும் குழந்தைகள்

நன்றி தினமலர்! :)

குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஆனால் பெற்றோர்களின் பங்களிப்பு இன்றி ஆசிரியர்களால் எதுவும் செய்ய இயலாது. பெரிதாக ஒன்றும் சாதித்து விட முடியாது. பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. துவக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் மன ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். அவர்களை கவனிக்க வேண்டிய முழு பொறுப்பும் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கு உள்ளது.

பிஞ்சு குழந்தைகளை, அவர்கள் மனதை, ஆசிரியர்கள் கையாளும் முறை பற்றிய உணர்ச்சிப் பூர்வமான விவாதங்கள் ஆங்காங்கு நடந்து கொண்டு இருக்கின்றன. பெரும் பாலானவர்கள், குழந்தைகளின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் மற்றவர்களை விட ஆசிரியர் களுக்கே அதிக பங்கு இருப்பதாக கருதுகின்றனர். அது உண்மையா? அப்படியென்றால், பெற்றோரின் பங்கு என்ன? குடும்பதினரின் பங்கு என்ன? சமுதாயத்தின் பங்கு என்ன?


குழந்தைகள் தங்களின் பெரும்பாலான நேரத்தை பள்ளியிலேயே செலவிடுகின்றனர். எனவே, குழந்தையின் வளர்ச்சியில் ஆசிரியருக்கு பெரும்பங்கு உண்டு. அவர்களை ஒரு வடிவத்திற்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஆனால், குழந்தையின் முன்னேற்றம் என்பது ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகிய இருவர் கையிலும் உள்ளது. இருவரும் இணைந்து கவனிக்கும் போதுதான் குழந்தையின் திறமை, விருப்பு, வெறுப்பு, சுக துக்கம் என அனைத்தும் வெளிவரும்.
குழந்தைகளுக்கு விடுமுறை விடுவதை பெரும்பாலான பெற்றோர் சுமையாகவே கருதுகின்றனர். குழந்தைகள் அவர்களின் பணிக்கு இடையூறாக இருப்பதாக கருதுகின்றனர். இதனால், பள்ளி என்பது “டே-கேர்’ சென்டராகி விடுகிறது. ஆனால், குழந்தைகள் பள்ளிக்கு ஒழுங்காக வருவார்களா என்றால் நிச்சயம் இல்லை.


துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் போல அன்புடன் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும். என்றாலும், பெற்றோர் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமைகளை வேறு யாராலும் செய்ய முடியாது. பெற்றோர் – ஆசிரியர் இணைந்து கருத்துக் களை பரிமாறி, குழந்தைகளை கையாள முயன்றால் மட்டுமே அது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன. எனவே, பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தை விடுமுறை எடுத்திருக்கும். உடல் நலக் குறைவு என்று ஸ்கூல் டைரியில் பெற்றோர் எழுதியிருப்பர். ஆனால், உண்மையில் ஏதாவது திருமணத்திற்கோ அல்லது வேறு எங்கோ சென்றிருப்பர். இது பெற்றோரின் திட்டமிடப்படாத செயலால் நிகழ்ந்ததாகும்.


இதில் குழந்தையின் தவறு ஒன்றுமில்லை. ஆனால், இதன் மூலம் தவறைச் செய்யவும், அதை நியாயப்படுத்தவும் குழந்தைக்கு பெற்றோரே கற்றுக் கொடுக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் தான், “ஹோம்-வொர்க் நோட்டில் ஏன் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கவில்லை?’ என்று ஆசிரியர் கேட்டால், “அம்மா லேட்டா தான் வீட்டுக்கு வந்தாங்க, பேனாவில் இங்க் இல்லை’ என்று காரணம் கூறுகின்றனர்.


தங்கள் குழந்தை மேதையாக இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். ஆனால், கற்கும் பருவத்திலேயே மேதையாகி விட முடியாது என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும். போகப் போக தான் அவர்கள் தங்கள் அறிவு சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்வர். அனைத்து குழந்தைகளும் மேதைகள் அல்ல.


சில பெற்றோர் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டு குழந்தைகளை இம்சிப்பர். அவர்களுக் கென்று தனி விருப்பம், திறமைகள் இருக்கும். அவர்கள் கடமையை மகிழ்ச்சியோடு செய்யும் வகையில் அவர்களுக்கு கல்வியை எளிமையாக்கி, படைப்பு திறனை வெளிக் கொணரும் வண்ணம் வாய்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் அவர்களின் திறமைகள், அவர்களது அறிவுத் திறனை அறிந்து அவர்களது குறிக்கோளை அடைய முடியும்.


பெற்றோர் தங்கள் அன்பை வெளிப்படுத்த குழந்தைகளுக்கு திகைப்பூட்டும் வகையில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கித் தருகின்றனர். அழகான விலை உயர்ந்த பென்சில் பாக்ஸ், பேக் என்று கொடுத்தனுப்புகின்றனர். இது, குழந்தைகளிடம் சில நேரத்தில் பொறாமை குணம் வளர வழி வகுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க இயலாத குழந்தைக்கு ஆசையை தூண்ட வழி செய்யும். அவ்வாறு விலை அதிகம் கொடுத்து வாங்கப்படும் பொருட்களை, சில நேரங்களில் கையாளக் கூட குழந்தைகளுக்கு தெரியாது. குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், சுதந்திரத்துடன் அவற்றை பயன்படுத்த வகை செய்ய வேண்டும்.
பெற்றோர் ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவை அளவிற்கு அதிகமாக கொடுத்து அனுப்புகின்றனர். இது சில சமயங்களில், அவர்கள் வயிற்றுக்கும் அதிகமாகி விடுகிறது. எனவே, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உணவு இடை வேளையானது, கஷ்டப்பட்டு சாப்பிடுவதிலேயே போய்விடுகிறது. உடலுக்கு நன்மை தரும் சத்தான உணவு அவசியம். ஆனால், உணவோடு அவர்கள் போராடும் வகையில் இருக்கக் கூடாது.

சில யோசனைகள்


* உங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணியுங்கள். அவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் அறிவுடனும், திறமையுடனும் வளர, ஆசிரியர் மட்டுமில்லாமல் நீங்களும் துணையாக இருக்க வேண்டும்.


* உங்கள் அக்கறையை லஞ்ச் பாக்சில் காட்ட வேண்டாம். குழந்தைகள் மீது காட்டவும். குழந்தையால் முடிந்த அளவு மட்டுமே உண்ண முடியும்.


* குழந்தைகள் அறிவு சார்ந்த, செயற்கரிய செயல்களை செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள். குழந்தைகள் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள்.


* அவர்கள் தவறுகள் செய்யும் போது அதை அனுமதியுங்கள். அவர்கள் செய்வதை நீங்கள் கண்காணிப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். பின் தவறுகளை திருத்தி அவர்கள் வெற்றி பெற உதவுங்கள்.


* அவர்கள் பிழை செய்யும் போது, பெருந்தன்மையாக, அதே நேரத்தில் உறுதியாக அவர்களை திருத்துங்கள்.

« பழைய வரவுகள்