மாங்காய் என்றால் பச்சடி, குழம்பு, ஊறுகாய் என்று வைப்பார்கள்! மாங்காயை வைத்து சாதமும் செய்யலாம்! இதனை நானே செய்து பார்த்தேன்! மிகவும் சுவையாக இருந்தது. உங்களுக்கும் சொல்லி தருகிறேன்! வீட்டில் செய்து பார்த்து ருசியுங்கள்! இதனுடன் சாம்பார் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்:
- வேகவைத்த சாதம் – 2கப்
- துருவிய மாங்காய் – 1கப்
- மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
- கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு – 1ஸ்பூன்
- வறுத்த நிலக்கடலை – 1கையளவு
- காய்ந்த மிளகாய் – 6
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி இழை – சிறிதளவு
- வறுத்து பொடித்த வெந்தயம் – 1/2 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – 1/4ஸ்பூன்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
- வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
- வறுத்ததும் கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்.
- பின்பு அதனுடன் மஞ்சள் தூள், துருவிய மாங்காய் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
- வதக்கியவுடன் உப்பு, வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பை சிறிதாக வைத்து தணலில் 5 நிமிடம் வைக்கவும்.
- மேலாக கொத்தமல்லி இழையை தூவவும்.
- சுவையான மாங்காய் சாதம் தயார்.
