உடல் எடை அதிகரித்தல்:
பெரும்பாலான பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னை உடல் எடை அதிகரித்தல். உடல் எடையை குறைக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் எடையை குறைப் பதற்காக, சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது கடைகளில் விற்கும் உடற்பயிற்சி புத்தகங்களை வாங்கி, அதில் உள்ள பயிற்சிகளை செய்வதாலோ உடல் எடை குறைந்து விடாது. மருத்துவரின் ஆலோசனை இன்றி இவ்வாறு செய்தால் தீங்கு ஏற்படும்.
ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்பு ஒரே மாதிரியாக அமைந்திருக்காது. இருவருக்கும் இடையே சில அடிப்படை வேறுபாடுகள் காணப்படும். உடலில் அதிகளவில் கொழுப்பு செல்கள் சேர்வதாலேயே எடை அதிகரிக்கிறது. இன்சுலின், ஈஸ்ட்ரோஜன், எபிநெப்ரின் மற்றும் இன்னும் பல சுரப்பிகளே கொழுப்பு செல்கள் சேர்வதற்கு அடிப்படை காரணம். இது, ஆண், பெண் என இருவருக்கும் வெவ்வேறு விகிதத்தில் மாறுபடும்.
உணவில் கவனம் தேவை:
ஆண், பெண் இருவருக்கும் இடையே கொழுப்பு செல்கள் சேர்வதில், பெரியளவில் மாறுபாடு நிலவுகிறது. உதாரணத்திற்கு, மாலை வேளையில் ஒரு ஆண் பட்டர் சிக்கன் சாப்பிட்டால், மறுநாள் காலை அவர் ஜிம்மில் கூடுதல் <உடற் பயிற்சி செய்வதின் மூலம், கொழுப்பு செல்கள் சேராமல் தடுக்க முடியும். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவ்வாறு இல்லை. எனவே, பெண் கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடாமல் இருக்க கூடாது. நாம் சாப்பிடும் உணவின் தன்மைகளில், கவனமுடன் இருக்க வேண்டும். பொதுவாகவே கர்ப்பிணி பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிக கொழுப்பு சேரும். அப்போது தான் குழந் தையை தாங்கும் சக்தி கிடைக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் கொழுப்பை கரைப்பதற்கு பதிலாக, அவற்றை சேமிக்கவே உடல் முயற்சிக்கும். எனவே, அதற்கு தகுந்த உணவையே சாப்பிட வேண்டும்.
சுழற்சி மாற்றங்கள்:
மாதவிடாய் சுழற்சி, பெண்களின் ஆரோக் கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சுழற்சி முதல் பாதியின் போது தான், உடல் கர்ப்பமடைவதற்காக தயார் நிலையில் இருக்கும். அடுத்த பாதியில், கர்ப்பபையில் இருப் பதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது. இந்த முதல் பாதி வேலையை ஈஸ்ட்ரோஜன் என்றசுரப்பியும், மறு பாதி வேலையை புரோஜஸ்ட்ரோன் என்ற சுரப்பியும் செய்கிறது. இதைப் புரிந்து கொண்டால், எந்த நேரத்தில் எந்த மாதிரியான உணவை உட்கொள்ளலாம் என்பது விளங்கும். மாதவிடாய் சுழற்சி காலங்களில் முதல் 15 நாட்களுக்கு, குறைவான கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடலாம். அப்போது தான் உடலில் கொழுப்பு சேர்வது குறையும். அடுத்த 15 நாட்களுக்கு இரும்பு மற்றும் அதிக நார்ச்சத்து உணவுகளையே சாப்பிடலாம். இது உடலில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற உதவும். மேலும் இரவு நேரங்களில் அதிக உப்பு உபயோகப்படுத்துவதை தவிர்த்தல் நல்லது.
நன்றி தினமலர்!
