காதலன் – என்னவளே அடி என்னவளே

படம்: காதலன்
பாடல்: என்னவளே அடி என்னவளே
இசை: ஏ.ஆர்.ரகுமான்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே……..

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே…………

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்மிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவிங்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
காதலின் தேவதையாய் காதுக்குள் ஒதிவைப்பேன்
காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றொரைப்பேன்

என்னவளே அடி என்னவளே…………

காதலன் – காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீ தந்தால்

படம்: காதலன்
பாடல்: காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீ தந்தால்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீ தந்தால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே!
காதலிக்கும் பெண்ணின் கண்ணம் இரண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே!
சிந்து வியர்வை தீர்த்தம் ஆகும்!
சின்ன பார்வை மோட்சம் ஆகும்!
காதலின் சங்கீதமே…..
ம்..ம்… பூமியின் பூபாலமே….
காதலின் சங்கீதமே……..
ம்…ம்…..பூமியின் பூபாலமே…..

ஹூம் ம் ம்
ச நி ச ச ஹ ரீ நி
ச நி ப நி ச நி ச
ச ஹ ம ம ப ம க ரி ச
ச நி ச ச ஹ ரீ நி
ச நி ப நி ச நி ச
ச க ம ம ம ம ப ம க ரி ச
ந னா ந னா

காதலிக்கும் பெண் கிருக்கும் கை இருட்டிலே
கண்ட பிழைகள் கூட கவிதைகள் ஆகுமே!
காதல் ஒன்றும் குற்றம் கிற்றம் பார்ப்பதல்லையே
எச்சில் கூட கவிதை ஆகுமே!
குண்டுமல்லி இரண்டு ரூபாய்
உன் குந்தலில் உதிரும் பூ கோடி ரூபாய்!
பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்
நீ பாடித் தின்று தந்ததினால் லட்ச ரூபாய்!
ம்….ம்…..ம்….

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீ தந்தால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே!
காதலிக்கும் பெண்ணின் கண்ணம் இரண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே!
சிந்து வியர்வை தீர்த்தம் ஆகும்!
சின்ன பார்வை மோட்சம் ஆகும்!
காதலின் சங்கீதமே…..
ம்..ம்… பூமியின் பூபாலமே….
காதலின் சங்கீதமே……..
ம்…ம்…..பூமியின் பூபாலமே…..
அ….ஹ….அ….ஹ……

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகுகாலம் கூட ராசியாகுமே!
காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே
காக்கய் கூட தூது போகுமே!
காதல் ஜோடி குறைவதில்லை
காதல் என்றும் குற்றம் பார்ப்பதில்லை
இதில் அர்பமானதும் எதுவுமில்லை
இந்த நுட்பம் உ உ க்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவால் பாடிய பாடல்
காதில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்வதும் என்று
காதல் முள்ளின் வழியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்வதும் என்று
ந னா ந னா………….

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீ தந்தால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே!
காதலிக்கும் பெண்ணின் கண்ணம் இரண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே!
சிந்து வியர்வை தீர்த்தம் ஆகும்!
சின்ன பார்வை மோட்சம் ஆகும்!
காதலின் சங்கீதமே…..
ம்..ம்… பூமியின் பூபாலமே….
காதலின் சங்கீதமே……..
ம்…ம்…..பூமியின் பூபாலமே…..

« பழைய வரவுகள்