வெண்ணிலா மில்க் சேக்

இது மிகவும் சுவையாக இருக்கும். வெயில் காலத்திற்கு ஏற்றது. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதை எளிதில் செய்து விடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

வெண்ணிலா ஐஸ் – 2கப்

வெண்ணிலா எசன்ஸ் – 2ஸ்பூன்

பால் – 1கப்

சர்க்கரை – 1/4கப்

ஐஸ் கட்டிகள் – 5 நம்பர்

பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு – 1/4கப்

செய்முறை:-

முதலில் மிக்ஸி ஜாரில் வெண்ணிலா ஐஸ், வெண்ணிலா எசன்ஸ், பால், ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்கு நுரை வரும் வரை விட்டு விட்டு சுற்றவும்.

பின்பு அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு மிக்ஸியில் சுற்றிக் கொள்ளவும்.

அக்கலவை தனியே எடுத்து அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி பிரிட்ஜில் வைத்து தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.

சுவையான வெண்ணிலா மில்க் சேக் தயார்.

கணிப்பொறியில் வரைந்தது

13 புள்ளி 5 வரிசை  5 முடிய நேர்புள்ளி

13 புள்ளி 5 வரிசை 5 முடிய நேர்புள்ளி

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers